Designed by Iniyas LTD
ஊரக வேலைத்திட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக தமிழக அரசாங்கத்திற்கு தேசிய விருது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை இதர திட்டங்களுடன் ஒருங்கிணைத்து நாட்டிலேயே சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசாங்கத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
தலைநகர் புது டெல்லியில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நாள் மாநாட்டில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த விருதை நேற்று நேற்று வழங்கியுள்ளார். மேலும், வழங்கப்பட்ட குறித்த விருதை தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பெற்றுக்கொண்டார். அத்தோடு, குறித்த மாநாட்டில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைத்திருந்த கண்காட்சிக்கு சிறந்த கண்காட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது.
இந்த விருதை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பிரேந்தர் சிங் வழங்க, தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் க.பாஸ்கரன், கூடுதல் இயக்குனர் பி.பொன்னையா ஆகியோர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.