Designed by Iniyas LTD
ஊழல் அமைச்சர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து மக்களிடம் ஒப்படைக்கப்படும் – வைகோ
மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்களை கூண்டில் ஏற்றி அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து மக்களிடம் ஒப்படைக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஊழலில் வேறுபாடு இல்லை என கூறினார். மக்கள் நல கூட்டனி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்த கூட்டத்தில் அக்கூட்டணியின் கட்சிகளை சேர்ந்த மதிமுக பொதுசெயலாளர் வைக்கோ, மார்சிசஸ்ட் கம்யூ கட்சியின் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் வைக்கோ பேசுகையில், மக்கள் நல கூட்டனி ஆட்சிக்கு வந்தால் ஆனைமலையாறு நல்லாறு திட்டங்கள் நினறவேற்றப்படும், கொப்பரைக்கு பதிலாக தேங்காய்க்கு ஆதரவு விலை நிர்னையித்து விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்படும், தென்னை வளர்ச்சி வாரியம் பெள்ளாச்சியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், மணல் கொள்ளை முற்றிலுமாக தடுக்கப்படும், தாது மணல் கொள்ளை கிரெனைட் ஊழல் போன்ற ஊழல்களில் ஈடுபட்ட அ.தி.மு.க., தி.மு.க., அமைச்சர்களிடம் இருந்து சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும், மற்றும் மது இல்லாத தமிழகம் உருவாக்கப்படும், என வைகோ பொதுகூட்டத்தில் பேசினார்.
திருமாவளவன் பேசியபோது: இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் தமிழகத்தை 50ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் சுரண்டல் ஆட்சிகளை துாக்கி எறிய வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள். நாடு முழுவதும் மூலை முடுக்கெல்லாம் திறந்து வைக்கப்பட்டுள்ள மதுக்கடைகளால் பள்ளி மாணவர்கள் முதல் மதுவுக்கு அடிமையாகி குடி கலாச்சாரம் பொது கலாச்சாரமாக மாறிவிட்டது அரசுக்கு மது கடைகள் மீது வருமானம் அதிகமாக இருப்பதால் மது கடைகளை மூட முன்வரவில்லை இதனால் இளைய தலைமுறைகள் சீரழிந்து வருகின்றனர் .
ஜி. ராமகிருஷ்ணன் பேசுகையில்: கடந்த ஐந்தாண்டு அ.தி.மு.க., ஆட்சியில் 35 விவசாயிகள் கடன் தொல்லையால் தற்க்கொலை செய்து கொண்டுள்ளார்கள், விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் கரும்பு நெல் மஞ்சள் போன்ற விவசாயிகளின் விலை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. தி. மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஊழலில் வேருபாடில்லை,சமூகம் மதம் பிரச்சனைகளை பற்றி கவலை இல்லை. ககாங்கிரஸ்., பா.ஜ.க.,அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நல கூட்டனி ஆட்சி அமைத்து மக்கள் பிரச்சனையை தீர்க்கும் என ஜி. ராமகிருஷ்ணன் பொள்ளாச்சியில் நடந்த பொதுகூட்டத்தில் பேசினார்