தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எகிப்தில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து

எகிப்து நாட்டில் அகதிகளுடன் மத்திய தரைக்கடலில் சென்ற படகொன்று திடீரென்று நீரில் மூழ்கியது. இதில் 10 பேர் பலியாகினர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.akipthu

இதனை எகிப்து நாட்டின் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் காலித் மெகஹெத் உறுதி செய்துள்ளார்.  மூழ்கிய படகிலிருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட அகதிகளை மீட்புக்குழுவினர் காப்பாற்றியதாகவும், வேறு யாராவது உயிர்பிழைத்திருக்கிறார்களா? என்று தேடி வருவதாகவும் எகிப்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றதால் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Comments
Loading...