Designed by Iniyas LTD
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் பாதிக்கப்பட்ட கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகள் தொடர்கின்றன
தீ விபத்துக்குள்ளான எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்ற 2021 மே 26ஆம் திகதி ஆரம்பித்த கடற்கரை சுத்தம் செய்யும் பணிகளை கடற்படை ஏனைய பங்கேற்பாளர்களுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய பதிவு
உஸ்வெட்டகெய்யாவ முதல் கெபுன்கொட வரை 9 கிலோமீற்றர் பாதிப்புக்குள்ளான கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ள உஸ்வெட்டகெய்யாவ, எலெனேகொட, சரக்குவா மற்றும் கெபுன்கொட கடற்கரைப் பகுதிகள் கப்பல் குப்பைகளால் பெரிதும் மாசடைந்துள்ளன என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை நிலைவரப்படி அந்தக் கடலோரப் பகுதிகளில் கடற்படை மேற்கொண்ட துப்புரவு முயற்சிகளிலிருந்து தீ விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய 1500 தொன்களுக்கும் அதிகமான குப்பைகள் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.