Designed by Iniyas LTD
எங்கள் மண்ணில் இருந்து படையினரே வெளியேறு கேப்பாபுலவு மக்கள் போராட்டம்!
வடக்குக்கு விஜயத்தை மேற்கொண்ட சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்நிலையில் கேப்பாபுலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்ககோரி முல்லைத்தீவு நகரில் பலத்த பொலீசாரின் பாதுகாப்பு தடைகளுக்கு மத்தியில் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.
கேப்பாபுலவு மக்களின் காணிவிடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியோ பிரதமரோ பதில்கூறவில்லை என்றால் அந்த மக்களை கடலில் கொட்டுங்கள் .
104 குடும்பங்களையும் கடலில் கொட்டுங்கள் .
நாளாந்தம் அணுஅணுவாக செத்துக்கொண்டு இருக்கின்றோம் .எங்கள் வாழ்வாதாரம் முழுதும் படையினர் எடுத்துக்கொண்டு எங்களை தெருவில் விட்டுள்ளார்கள்.இராணுவமே எங்கள் மண்ணை விட்டு வெளியேறு,
எமது நிலம் எமக்கு வேண்டும்,எமது கடல் எமக்கு வேண்டும்,எமது வளம் எமக்கு வேண்டும் என்ற கோசங்களை கத்தியவாறு தங்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
இதேவேளை கேப்பாபுலவில் நிலமீட்டு பேராட்டம் நடத்திவரும் மக்கள் தங்கள் நிலங்களில் உள்ள படையினரை வெளியேற்றி தங்கள் வாழ் இடங்களில் குடியேற்ற வேண்டும் எனகோரி 716 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அவர்கள் தங்கள் பிரச்சனையினை பிரதமர் ரணிலுக்கு தெரிவிக்வலியுறுத்தியும் தங்கள் நிலங்களை விடுவிக்ககோரியும் முல்லைத்தீவு வட்டுவாகல் வீதியில் பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
இவர்களையும் பொலீசார் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் செல்வதற்கு தடை போட்டு தடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு நகரினை சுற்றி அதிகளவு பொலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் பிரதமர் ரணில் அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயல நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






