Designed by Iniyas LTD
எச்சரிக்கை செய்து திருப்பி அனுபப்பட்ட தமிழக மீனவர்கள்…
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட முயற்சித்த போது, கடற்படையினரால் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த மீனவர்கள் நாகபட்டிணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 5 படகுகளில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அவர்கள் அத்துமீறி பிரவேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே அவர்கள் கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.