தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூச்சல் குழப்பத்தால் நாடாளுமன்ற அவை பாதிப்பு

கருப்புப் பணம் மற்றும் உரத்தட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூச்சல் குழப்பம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.Parliament

மக்களவை இன்று காலை கூடியதும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கருப்புப் பண விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அவர்களுக்கு ஆதரவாக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களும் கோஷங்களை எழுப்பினர்.

கருப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்றும்,வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அந்தப் பணத்தை இந்தியா கொண்டுவர எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்தும் விவாதிக்க வலியுறுத்தப்பட்டது.

இதற்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதி மறுத்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரது இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 12 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் அறிவித்தார். இதன்பின்னர் 12 மணிக்கு அவை  மீண்டும் கூடியுள்ளது.

Comments
Loading...