தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எதிர்வரும் இரு நாட்களுக்கு ஏழரை மணித்தியால மின் வெட்டு

power cut in srilanka
அடுத்த இரு நாட்களிற்கான மின்துண்டிப்பு குறித்த விபரங்களை சற்று முன்னர் அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் நாளை முதல் பகலில் ஜந்தரை மணித்தியலாங்களும் இரவில் இரண்டரை மணித்தியாலங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் என அமைச்சர் அறவித்துள்ளார். நான்கு வலய பிரிவுகளின் படி இலங்கையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
 
இதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய அங்கு சென்றிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 
இதன்படி
 
பிரிவு
 
தொடர்புடைய பதிவு
A காலை 07.00 – 12.30 மற்றும் மாலை 06.00 – 08.00
 
B – காலை 07.00 – 12.30 மற்றும் மாலை 06.00 – 08.00
 
C – பகல் 12.30 – 06.00 மற்றும் இரவு 08.00 – 10.00
 
D – பகல் 12.30 – 06.00 மற்றும் இரவு 08.00 – 10.000
 
என அவர் தெரிவித்துள்ளார் எனினும் இந்த வலயங்கள் எவையென்ற விபரங்களை அவர் வெளியிடவில்லை.
 
எதிர்வரும் இரு நாட்களில், நாளொன்றுக்கு ஏழரை மணித்தியாலம் என்ற அடிப்படையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த மின்வெட்டானது இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என்று தெரிவித்த அமைச்சு, காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Loading...