தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எதிர்வரும் வியாழக்கிழமை காணாமல் ஆக்கப்பட்டடோருக்கான சர்வதேச தினத்தை அனுஸ்டிக்க உள்ள இலங்கை அரசாங்கம்..

இலங்கை  அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டடோருக்கான சர்வதேச தினத்தை அனுஸ்டிக்க உள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை இந்த தினத்தை  அனுஷ்டிக்க அரசாங்கம்  திர்மானித்துள்ளதாகவும் கூறபப்ட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் ஊடாக  விசேட வேலைத்திட்டத்தை இதற்காக  ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

காணாமல் ஆக்கப்படுவதற்கு இடமளியோம் என்பது இதன் தொனிப்பொருள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி திருமதி தீபிகா உடுகம இந்த நிகழ்வுகளில் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

அதோடு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் செயற்பாட்டாளர்கள் பலர் இதில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...