Designed by Iniyas LTD
எதிர்வரும் 15ஆம் திகதி பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்…
பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும், 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து இந்த இரண்டு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த அபிவிருத்தித் திட்டங்கள் 15 மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் பின்னர் பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை நடத்தப்படவுள்ளது.
அதோடு , காங்கேசன்துறை துறைமுகம் வழியாக, வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 2 பில்லியன் ரூபா செலவில் குறித்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
