Designed by Iniyas LTD
எதிர்வரும் 8 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பட்டுள்ள மனித எச்சங்களின் அறிக்கை வெளிவரும் – சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ..
மன்னார் சதொச வளாக மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில்,குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளிவருமென சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மன்னார் மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை 139 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதுவரை குறித்த வளாகத்தில் இருந்து 312 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றில் 297 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 26 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா புளோறிடாவிற்கு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 8 ஆம் திகதி வெளிவரும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி புளோரிடாவில் உள்ள கூடத்தில் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

