தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எந்தவகையான ஆட்சி தமிழ் மக்களுக்கு தேவை என்பதை தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்துக் கணிப்பொன்று இடம்பெற உள்ளது.

இலங்கையில் எந்த வகையான ஆட்சி  தமிழ் மக்களுக்கு தேவை என்பதை தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்துக் கணிப்பொன்று  மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில்  இன்று நாடுகடந்த தமிழ் அமைப்பினால் இந்த மக்கள் கருத்துக்கணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த  கருத்துகணிப்பிற்கு ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகமும் நெதர்லாந்தின் அமைச்சரவை அமைச்சருமான அட்ரியனர்ஸ் மெல்கர்ட் தமது ஆதரவினை  தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஊடாக  ஊடாக இலங்கையில் ஒற்றையாட்சியா? சமஷ்டி ஆட்சியா? அல்லது சுயாட்சியா? நிலவ வேண்டும் என்ற மக்களின் நிலைப்பாட்டை தீர்மானிக்க முடியும் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது .

மக்களின்  கருத்துக் கணிப்பு பெறுபேறுகளுக்கு அமைய  அதனை நாடுகடந்த தமிழ் அமைப்பு  ஏற்றுக்கொள்ளும் எனவும்  குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இதேபோன்ற சர்வதேச மக்கள் கருத்துக் கணிப்பின் மூலம் நீண்டகாலமாக பால நாடுகள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாகவும்  அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குரிப்பிடத்தக்கது.

Comments
Loading...