தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த ஆசான் கருணாநிதி : கமல் புகழாரம்

 திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாள் விழா ஜூன் 3 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அவரத வைரவிழாவும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நடிகர் கமலஹாசன் இன்று கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை கமல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், சிறந்த திரைக்கதை ஆசிரியர், வசனம் எழுதக் கூடியவர் கருணாநிதி. அவர் மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல. ஒரு அற்புதமான கதாசிரியர். கருணாநிதியை தமிழ் ஆசான் என்று கூறியதற்காக எம்.ஜி.ஆரும் என்னை பாராட்டினார்.

எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர்கள் கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன். கருணாநிதியின் வசனங்களை பேசிவிட்டால் ஒரு நடிகர் முழு தகுதி பெற்றவராகிறார். கருணாநிதி உடனான எனது உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது. தசாவதாரம் படத்தை பார்த்து விட்டு என் கன்னத்தை கிள்ளி பாராட்டினார். கருணாநிதி கிள்ளி பாராட்டிய கன்னம் என் கன்னம். கருணாநிதியின் வசனத்தை சிவாஜி கணேசன் குரலில் நடித்து காட்டுவது எனக்கு ஒரு பரிட்சை.

வைரவிழா கொண்டாடுது என்றால் எத்தனை இளமையில் அவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். எத்தனை முதுமைகளை தாங்கிப் பிடித்திருக்க வேண்டும். வாழ்த்துவதற்கு வயதில்லை என்பார்கள். வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை. நல்ல மனது இருந்தால் போதும்.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...