தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எனது போராட்டம் திமுக, அதிமுகவுக்கு எதிராகத்தான் இருக்கும். கமல்

நடிகர் கமல்ஹாசன் வெகுவிரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்கவிருக்கும் நிலையில் தனது போராட்டம் திமுக, மற்றும் அதிமுகவுக்கு எதிரான ஊழலுக்கு எதிராகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்

‘முரசொலி’ நாளிதழ் விழா ஒன்றில் கலந்து கொண்டதால் கமல், திமுகவுக்கு எதிரான ஊழல் குறித்து பேசவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கமல், தனது கட்சி திராவிட கட்சிகளுக்கு எதிராகத்தான் இருக்கும் என்றும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுகவின் ஊழலை பார்த்து மக்கள் கொதிப்படைந்துள்ளதால் இந்த இரண்டு கட்சிகளின் ஊழலை எதிர்க்கும் கட்சியாக தனது கட்சி இருக்கும் என்றும் கமல் கூறியுள்ளார்/

மேலும் ரஜினிகாந்த் ஆன்மீக நம்பிக்கை உடையவர் என்பதால் அவர் பாஜக கூட்டணிக்கு ஏற்றவர் என்றும், தான் பகுத்தறிவாதி என்பதால் எந்த கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டேன்’ என்றும் அவர் மேலும் கூறினார்.

Comments
Loading...