தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

என் நிலம் பிடுங்கப்படுமென தெரிந்தால்/ நரன்

dsc03022

நம்பு.இந்த எல்லையை நான் கிழிக்கவில்லை
எல்லையைத் தாண்டி நிற்கும் உனக்கும் எனக்கும் எந்தப் பிணக்குமில்லை
எதிரில் நிற்பதனாலேயே
உன்னை எதிரி என அழைக்க ஒப்பவில்லை
என் எதிரில் உன்னை நிற்க வைத்தவன் நானில்லை
நண்பனே.அவர்கள் ஒருபோதும் களத்திலில்லை
எல்லையில் நம்மை நிற்க வைத்துவிட்டு
அவர்கள் உள்நாட்டில் பூர்வீகக் குடிகளிடமிருந்து
நிலங்களை பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சிறு வயதில் சொந்த ஊரின் மண்ணை அள்ளி தின்றிருக்கிறாயா?
அவ்வளவு ருசி.
சூளைக்காரா…
என் நிலம் பிடுங்கப்படுமென தெரிந்தால்
இன்னும் நிறைய அள்ளி அள்ளித் தின்றிருப்பேன்
இப்போது கூட பார்
மதிய உணவிற்கு என் நிலத்திலிருந்து வேக வைக்கப்பட்ட
மூன்று செங்கற்களை வைத்திருக்கிறேன்.

-நரன்

-கல்குதிரை 27

Comments
Loading...