Designed by Iniyas LTD
என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை: வைகோ பதிலடி
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்தால் மகிழ்ச்சி தான். இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் அடிபட்டு உதைப்பட வேண்டிய நிலை தான் உள்ளது. மத்திய அரசு முதுகெலும்பு இல்லாமல் இருக்கிறது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதில் சொல்லி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
திருப்பூரில் ம.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா நடக்க உள்ளது. இந்நிகழ்வு திராவிட இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது என்பதை பிரகடனம் செய்யும் மாநாடாக இருக்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும், மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம், தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கருத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.