Designed by Iniyas LTD
எபோலாவினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் உடல் நலம் தேறி வருகின்றார்
சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் எபோலோவிற்கு சிகிச்சை பெற்றுவரும் க்யூபாவைச் சேர்ந்த மருத்துவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கியூபா சுகாதார அமைச்சகம் வெள்ளிக் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 43 வயதான மருத்துவர் Felix Baez Sarria-விற்கு செய்யப்பட்ட சோதனையில் அவரது உடலில் உள்ள திரவங்களில் வைரஸ் எதுவும் காணவில்லை என்றும் எல்லாம் மறைந்துவிட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியாரா லியோனில் எபோலா பாதிப்பில் இருந்தவர்களை காப்பாற்ற பணியாற்றி வந்த இந்த மருத்துவர் கடந்த நவம்பர் 20ம் திகதி எபோலோவால் தாக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஜெனிவா பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உடலில் நவம்பர் 25ம் திகதி முதல் நல்ல மாற்றம் தெரிய தொடங்கியது குறிப்பிடத்தக்கது.