Designed by Iniyas LTD
எபோலா தொற்றுக்கு பலியான ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்
எபோலா தொற்றுக்கு உள்ளான ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர் ஒருவர் ஜேர்மன் மருத்துவமனையில் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், நேற்று மரணமானதாக லிப்சிக் மருத்துவமனை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எபோலா காரமாக லைபீரியா, சியாரே லியோன், கினியா மற்றும் நைஜீரியா ஆகிய ஆபிரிக்க நாடுகளில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். நவீனமயமான இந்த காலகட்டத்தில் பரவி வரும் மிக மோசமான தொற்று நோய் இதுவென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உட்பட பல நாடுகளின் வானுர்தி நிலையங்களில் எபோலா தொற்நு குறித்து பரிசோதனை செய்யும் நவீன மருத்துவ சாதனங்களை பொருத்தி உள்ளமை குறிப்பிடதக்கது.