தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எபோலா வைரஸ்’ பாதிப்புக்குள்ளான அமெரிக்கா டாக்டர்

அமெரிக்காவின் நியூயார்க்கில் டாக்டர் ஒருவருக்கு ‘எபோலா வைரஸ்’  பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.   

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள லைபீரியா, நைஜீரியா, மாலி, கின்யா, உள்பட 6 நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நாடுகளில் இக்கொடிய நோய்க்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோய் தற்போது உலகையே மிரட்டி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அதை தடுப்பதற்கான மருந்துகளும் இல்லை. எனவே இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பு ஏற்படுவது நிச்சயம் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே மற்ற நாடுகளிலும் இந்த நோய் பரவிவிடாத வண்ணம் உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கையாக மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து தங்கள் நாடுகளுக்கு வருபவர்களை தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்க வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டாக்டர் ஒருவருக்கு ‘எபோலா வைரஸ்’  பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அமெரிக்க டாக்டர் கிரேக் ஸ்பென்சர் எபோலா வைரஸ் பாதிப்பு நிறைந்த கின்யா நாட்டில் மருத்துவ பணிகளில் ஈடுபட்டுஇருந்தார்.Ebola Viruses Symptoms

கடந்த 14ம் தேதி அவர் அமெரிக்கா திரும்பியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நியூயார்க் நகரில் முதல்முறையாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. முதல்கட்ட பரிசோதனையில் அவருக்கு ‘எபோலா’ நோய் கிருமியின் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அவரை தனிவார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே அவர் தங்கியிருந்த வீட்டிற்கு ஆட்கள் சென்றுவிடாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

கடந்த சிலநாட்களாக அவரை சந்தித்து பேசியவர்களையும் கண்டுபிடித்து அவர்களிடமும் மருத்துவ பரிசோதனை செய்யும் பணியில் சுகாதார ஊழியர்கள் இறங்கியுள்ளனர். அமெரிக்காவில் இதுவரையில் 4 பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Comments
Loading...