தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எப்.ஏ.கோப்பை காலிறுதிக்கு ஆர்சனல் அணி

எப்.ஏ.கோப்பை காலிறுதி போட்டியில் ஆர்சனல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. எப்.ஏ கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று-முன்தினம் நள்ளிரவு மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.manchester

ஆர்சனல்- மான்செஸ்டர் யுனைடெட் இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் தொடக்கம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. முதல் பாதியின் 25வது நிமிடத்தில் ஆர்சனல் வீரர் நாச்சோ மான்ரியல் முதல் கோல் அடித்தார். அடுத்த 4வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி பதில் கோல் திருப்பியது. இந்த கோலை மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் ரூனி அடித்தார்

இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் ஏஞ்சல் டி மரியாவுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

முதலில் ஆர்சனல் வீரர் ஆரோன் ராம்சேவிடம் முரட்டு ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நடுவர் மைக்கேல் ஓலிவரின் முதுகில் ஏஞ்சல் டி மரியா அடித்தார். இதையடுத்து 2வதாக மஞ்சள் அட்டை பெற்ற ஏஞ்சல் டி மரியா களத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

10 வீரர்களுடன் விளையாடிய மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்களால் ஆர்சனல் அணியின் தாக்குதல் ஆட்டத்தை தடுக்க முடியவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தில் 61வது நிமிடத்தில் ஆர்சனல் வீரர் டேனி வெல்பேக் அடித்த அட்டகாசமான கோல் மூலம் ஆர்சனல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று எப்.ஏ.கோப்பை அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

Comments
Loading...