தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எமது போராட்டத்தை குழப்ப சதி நடக்கிறது? கேப்பாபுலவு மக்கள்

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்து ஆளும்  தந்திரத்துக்கு நாங்கள் பலிக்கடாவாக மாட்டோம்” என, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர். கேப்பாப்பிலவு மக்கள், படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்ககோரி, படை முகாமுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட  போராட்டம் 51ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் பகுதியளவில் விடுவிக்கப்படுமெனவும் தகவல் வெளியானது. எனினும், “எமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது. கோரிக்கை. அவ்வாறு முழுமையாக விடுவிக்கப்படாது விட்டால் போராட்டம் தொடரும்” என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, “படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிக்குமாறு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராட்டத்தை மேற்கொள்கின்ற போது, எம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு பல சதி முயற்சிகள் நடைபெறுகின்றன” என அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எங்களிடையே பிரிவை ஏற்படுத்தும்நோக்கில் பகுதி பகுதியாக விடுவிக்கப்படும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அவரின் பிரித்தாழும் தந்திரோபாயத்துக்கு நாங்கள் ஒரு போதும் பலிக்கடாவாக மாட்டோம். எங்களது ஒருமித்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தை மேற்கொள்ளுவோம்” என்று, அந்த மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...