Designed by Iniyas LTD
எம்மாவீரச் செல்வங்களே… சிறப்புக்கவிதை..
எம்மாவீரர்கள்..
தாயக மண்ணின் காவல் தெய்வங்கள்.
தியாக சரித்திரங்களின் கதாநாயகர்கள்.
தழிழீழ தாய்க்காக களமாடிய
மாசற்ற மறவர்கள்
எம்மாவீரர்கள்…!
விடுதலை ஒன்றையே யாசித்து
அவர்கள் புரிந்ததோ பெருந்தவம்
தம்மை உருக்கி எம்மைக் காத்த
காவல் தெய்வங்கள்…!
மண்ணின் விடுதலைக்காய்
நிரந்தரமாய் மண்ணுள்ளே
உறங்கும் ஒப்பற்ற வேங்கைகள்
எம்மாவீரர்கள்..!
எம்மாவீரச் செல்வங்களே…
உண்மையான உங்கள் தியாகங்கள்
என்றும் வீண்போவதில்லை’ .
இதுவே நீதியும் நியதியுமாகும்.
பட்ட மரங்கள் மீண்டு(ம்) துளிர் விடும்.
கல்லறை மீதினில் கார்திகைப்
பூக்களும் மலரும்.
பாரெங்கும் உங்களுக்காய்
அகல்விளக்குகள் எரியும்.
அவ் அகல்விளக்கிலெல்லாம்
உம் திருமுகம் ஒளிரும்.
மாவீரர்கள் புதைக்கப்பட்டவர்கள் அல்ல.
எம் மண்ணிலும் மனதிலும்
விதைக்கப்பட்டவர்கள்.
தனு வட்டக்கச்சி…
