Designed by Iniyas LTD
எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் புதுக்கட்சி! தீபா அதிரடி
எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா கூறியுள்ளார்
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா பொறுப்பேற்றுள்ளார். ஆனால் சில அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறினார்கள்.
இதனிடையே, விரைவில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்பேன் என்றார்.தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு அதிமுக தொண்டர்கள் பலர் படையெடுத்து ‘புரட்சித் தலைவி வாழ்க’என்றும் கோஷமிடுகிறார்கள்.
தன்னைத் தேடிவரும் ஆதரவாளர்களிடம் நன்றி கூறி விரைவில் நல்ல முடிவு அறிவிப்பேன் என்று சொல்லிவந்தார். ஜெயலலிதா இறப்பினால் காலியாகியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தீபா போட்டியிட வேண்டும் என்றும் தீபாவைத் தேடி வருபவர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அத்தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு எதிராக தீபா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தீபா புதிதாக கட்சி தொடங்கப்போவதாக அவரது கணவர் மாதவன் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பிறந்தநாளில் தீபா புதுக்கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கட்சியின் பெயர், கொடி ஆகியவை பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.