தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எர்ணாகுளம் – ஹெளவுரா இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

TRAINஎர்ணாகுளம் – ஹெளவுரா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண் 02854:ல ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11 மணிக்கு ஹெளவுரா சென்றடையும்.

இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்தரி, விசாகப்பட்டினம், பிரம்மபூர், குர்தா சாலை, புபனேஷ்வர், கட்டக், பாத்ராக், காரக்பூர் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

Comments
Loading...