Designed by Iniyas LTD
எல்லா விடயங்களிலும் சுறண்டுகின்ற தன்மை முல்லைத்தீவ மாவட்டத்தில்-செல்வம் அடைக்கலநாதன்..
முல்லைத்தீவு மாவட்டத்தில்தான் இழப்புக்களும் நில அபகரிப்புக்களும் எல்லா விடயங்களிலும் சுறண்டுகின்ற தன்மையு காணப்படுகின்றது என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நல்லிணக்கத்திற்கான உறவுப் பயணம் நிகழ்ச்சி ஒன்று நேற்ரையதினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் நடைபெற்றுள்ளது.
2025 செல்வந்த நாடு என்ற எண்ணக்கருவினை வெற்றிகொள்வதற்கான இ,னங்களுக்கிடையில் சமாதானம்,சகவாழ்வு, நிலைத்து நிற்கக்கூடிய அமைதியான சனசமூகம் ஒன்றை கட்டி எழுப்பும் நோக்கிலும் தேசிய நல்லிணக்கத்தினை கட்டி எழுப்பும் நோக்கிலும் அம்பாந்தோட்டையினை சேர்ந்த இளைஞர் யுவதிகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள்
இவர்களை வரவேற்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு வேணாவில் வண்ணன் இளைஞர் கழகத்தினால் வேணாவில் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளதுடன் முதன்மை விருந்தினர் உரையினையும் நிகழ்த்தியுள்ளார்
அவர் மேலும் உரை நிகழ்துகையில்…
அம்பாந்தோட்டை அரசியல்சார்ந்த ஒரு பெரியமாவட்டம் முல்லைத்தீவு என்பது போரினால் தளம் அமைத்து போரை கண்டு பல இழப்புக்களை கொண்ட மாவட்டம்.
இந்த உறவுப்பாலம் நல்ல ஒரு விடயமாகவே நான் பாக்கின்றேன்.அம்பாந்தோட்டையினை சேர்ந்த இளைஞர் யுவதிகள் இங்கு இருக்கின்ற நாட்களில் உங்களுடைய மனக்கிடைக்கைகளை சோகத்தை யாரையும் திட்டாது எடுத்து சொல்லுங்கள்.
எங்களுடைய இனத்திற்காக நாங்கள் செய்த தியாகங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில்தான் இழப்புக்களும் நில அபகரிப்புக்களும் எல்லா விடயங்களிலும் சுறண்டுகின்ற தன்மை காணப்படுகின்றது என்று அவர்களிடம் நீங்கள் கூறுங்கள்
அம்பாந்தோட்டையில் இருந்து வந்துள்ள இளைஞர்கள் தங்களுடைய குடும்பங்களில் நண்பர்களுக்கு உங்களுடைய சோகத்தை பகிர்கின்ற வாய்ப்பினை நன்றாக பயன்படுத்த வேண்டும்.
இளைஞர்களின் ஊடாக தமிழர்களின் பிரச்சனைகளை கொண்டு சொல்வதன் ஊடாக மனமாற்றத்தினை தென்னிலங்கையில் கொண்டுவருவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும்.
இங்குள்ள தமிழ் மக்களின் மன ஆதங்கங்களை தெற்கிற்கு கொண்டு செல்வதன் ஊடாக எங்களின் உறவுப்பாலத்தினை பலப்படுத்துவதே எங்களின் ஆவலாக இருக்கின்றது.
புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு என்று சொன்னாலே தென்னிலங்கையில் அச்சங்கள் காணப்படுகின்றது அதற்காக தென்னிலங்கை இளைஞர்யுவதிகளை வழியனுப்பி வைத்த பெற்றோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இளைஞர்களின் உறவுப்பாலம் என்பதுதான் இந்த நாட்டை ஒரு சமாதானமான இனங்களுக்குள்ளே பிரச்சனை இல்லாத ஒரு தீர்வினை கொண்டுவரும் இளைஞர் சமூகம் முன்வருகின்றபோதுதான் இந்த நாட்டில் அவைஎல்லாம் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
நீங்கள் செல்கின்ற ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இழப்புக்கள் வீடுகளில் இருக்கின்றது இங்கு இறுதியாக எந்த உடமையும் இல்லாமல் வெறும் செப்பீன் பையுடன்தான் எங்கள் உறவுகள் இருந்தார்கள். இந்த மக்களுக்கிடையில் உள்ள உறவு பாலம் என்பது அவர்களின் சோகத்தை நீங்கள் தாங்கி தென்னிலங்கைக்கு செல்லவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு இளைஞர் சேவை அதிகாரி விஜிதரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் ஜெனமேஜெயந்த் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி கு சறோஜா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாண நிர்வாக உத்தியோகத்தர் முல்லைத்தீவு மற்றும் அம்பாந்தோட்டை இளைஞர் சேவை அதிகாரிகள் முல்லைத்தீவு மற்றும் அம்பாந்தோட்டை இளைஞர் யுவதிகள் பெற்றோர் நலன்விரும்பிகலேன பலரும் கலந்துகொண்டனர்
இவர்கள் 2 2 ம் திகதிவரை வேணாவில் பகுதியில் உள்ள வீடுகளில் தங்கிநின்று பல்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது




