தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எல்லை தாண்டிவந்த இந்திய மீனவர்கள் 21 பேர் கைது

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறப்படும் இந்திய மீனவர்கள் 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   தலைமன்னார் கடற்பகுதியில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.  fish

இவர்கள் வசமிருந்து மீன்பிடி படகுகள் மூன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.   இதேவேளை, குறித்த மீனவர்கள் படகுகளுடன் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.   அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்

Comments
Loading...