Designed by Iniyas LTD
எழுத்தாளர் ஆ.மாதவனின் இலக்கிய திறனாய்வு கட்டுரைத் தொகுப்பிற்க்கு சாகித்ய அகாடமி விருது!
2014 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுகளுக்கு 19 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழில் எழுத்தாளர் ஆ. மாதவனின் படைப்புக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் எழுதிய இலக்கியச் சுவடுகள் என்ற தமிழ் இலக்கிய திறனாய்வு கட்டுரைத் தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.
ஆ. மாதவனின் முதல் சிறுகதைத் தொகுதி மோக பல்லவி. “கடைத்தெருக் கதைகள்” மூலம் இவர் பிரபலமானார். இவரது புனலும் மணலும், கிருஷ்ணப்பருந்து, தூவானம் ஆகியவை மிகவும் புகழ்பெற்ற நாவல்களாகும்.
சாகித்ய அகாதமி விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ஆ.மாதவன் தெரிவித்துள்ளார். சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் விருதாகும்.
இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.