தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு 25 ஆம் திகதி வெளியிடப்படும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதினார்கள்.  கடந்த மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13–ந் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டு மதிப்பெண் பதிவு செய்யும் பணியும் நிறைவடைந்தது, தேர்வு முடிவுகளை வெளியிட தயார்நிலையில் அரசு தேர்வுத்துறை தயாராக உள்ளது,.  விரிவான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.SSLC-RESULT

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுநாள் (25–ந் தேதி) காலை 9.31 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.  தேர்வு முடிவுகள் அரசு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.  அனைத்து பள்ளிகளிலும் காலை 9.31 மணிக்கு மேல் தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். சென்னையில் கல்லூரி சாலையில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் காலை 9.31 மணிக்கு பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது.

பிளஸ்–2 தேர்வு முடிவு கடந்த 17–ந் தேதி வெளியானது. தேர்வு முடிவு காலை 10.31 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த போதிலும் 2 மணி நேரத்திற்கு முன்னதாக பள்ளிகளில் வெளியானது.  முதல் மதிப்பெண் மற்றும் ரேங்க் பெற்றவர்கள் விவரம் தனியார் பள்ளிகள் மூலம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது தேர்வு முடிவை அரசு தேர்வுத்துறை ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்ட்டு இருந்த போதிலும் முன்னதாக சிலர் வெளியிட்டது தேர்வுத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது  அதனால் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவை ஒரே நேரத்தல் முறையாக பள்ளிகள் கட்டாயம் வெளியிட வேண்டும். முன்னதாக வெளியிட்டால் அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் மாலை மலர் நிருபரிடம் கூறுகையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் 25–ந்தேதி காலை 9.31 மணிக்கு வெளியிடப்படும். பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடவேண்டும். அதற்கு முன்னதாக வெளியிடக்கூடாது இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் அடங்கிய முத்திரையை 9.31 மணிக்கு தான் பிரிக்க வேண்டும் அதற்கு முன்னதாக பிரித்தால் சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Comments
Loading...