தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எஸ் பி மற்றும் கங்கை அமரனின் வருகையால் எட்டு லட்சம் வருமானம்!

spb-jaffna-091016-seithy-5-450x337பாலசுப்பிரமணியத்தின்  யாழ். வருகையினால் மாநகர சபைக்கு  வருமானம் சுமார் 8 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மாநாகர ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தென்னிந்திய கலைஞர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் , கங்கைஅமரன் ஆகியோரின்   யாழ். வருகையின் மூலம்  யாழ்ப்பாணம்  மாநகர சபைக்கும்  சுமார் 8 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

குறிப்பாக மாநகரப் பிரதேசத்மிற்குள் இடம்பெற்ற கலியாட்ட நிகழ்வு வரியாக சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் , மாநகர சபைக்குச் சொந்தமான இடத்தினை பயன்படுத்திய வகையில் குறித்த இடம் 3 நாட்களிற்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. நாள் ஒன்றிற்கு 11 ஆயிரம் ரூபா வீதம் 33 ஆயிரம் ரூபாவும் இதற்கான 13 வீத வரிப்பணமும் மாநகரசபைக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழில் இடம்பெற்ற ஒரு நாள் நிகழ்வினால் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா அளவிலான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. என்றார்.

Comments
Loading...