Designed by Iniyas LTD
ஏமன் நாட்டு சோதனைச்சாவடிகள் மீது கார் குண்டு தாக்குதல்
ஏமன் நாட்டின் ஏடென் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஹட்ரமவுட் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான முகல்லாவில் வாகன போக்குவரத்தை கண்காணிக்கும் ராணுவ சோதனைச் சாவடிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. 
அவ்வகையில், முகல்லா நகரில் உள்ள அல்-புரும் மற்றும் அல்-கபர் நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் மீது வெடிகுண்டுகள் கொண்ட கார்களை தீவிரவாதிகள் மோத வைத்ததில் பத்துக்கும் அதிகமானோர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு ஏமனில் இயங்கிவரும் அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.