தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஏமனில் தொடர் தாக்குதல்

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு எதிராக ஷியா பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக சண்டையிடுவதற்கு சவுதி கூட்டுப்படைகள் களத்தில் உள்ளன.  தெற்கு ஏமனில் தீவிரவாதிகள் மீது சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்கள் நடத்த தொடங்கியதால், அவர்களின் முகாமை தகர்க்க முயற்சி நடந்தது.  eman

இந்த நிலையில் அங்குள்ள ஏடன் நகரில், அதிபர் ஆதரவு படையினரின் சோதனை சாவடிகளை குறி வைத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அடுத்தடுத்து 3 தற்கொலை படை தாக்குதல்களை நடத்தினர்.  இந்த தாக்குதல்களில் 26 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.  இந்த தாக்குதல்களுக்கு “நாங்கள் தான் பொறுப்பு” என ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.   ஏமனில் உள்நாட்டுப்போர் தொடங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

Comments
Loading...