தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் ஏரி 200 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா தலைமையில் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரி ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தனர்.eeri

இந்தநிலையில் மாடம்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஆக்கிரமிப்பாளர்களே அகற்றிக்கொள்ள ஒரு வாரம் கெடு விதித்து பொதுப்பணித்துறை சார்பில் நேற்று காலை அந்த பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

Comments
Loading...