தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஏழு கோடி மோசடி செய்த சண். குகவரதன்..!!

ஏழு கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் மனோ கணேசன்  சண். குகவரதனுக்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கனகசபை சற்குணநாதன் என்ற 75 வயது வயோதிபருடன், ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கலின் போது இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில், அக்கட்சியின் தலைவர் மனோ கணேசனால், சண்முகநாதன் குகவரதனுக்கு, மின்னஞ்சல் ஊடாகக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

இது தொடர்பில், மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர்பில், தனக்கு அறியத்தருமாறும், மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Comments
Loading...