Designed by Iniyas LTD
ஏ.டி.எம் இல் பணம் எடுத்தவருக்கு கத்தி குத்து!
ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் இவர் நேற்று வணிகவளாகம் செல்ல மோட்டார் சைக்கிளில் சென்றார். மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் ரூ.10 ஆயிரம் எடுத்து கொண்டு வெளியே வந்தார்.
அப்போது மர்ம மனிதர்கள் கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். தோள்பட்டையில் காயம் அடைந்த வெங்கடேசன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.