Designed by Iniyas LTD
ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய இளம் பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு…
ஐஎஸ் தீவிரவாதிகளிடம் செக்ஸ் அடிமையாக இருந்து தப்பிய இளம் பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை காங்கோவை சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜாவும், இராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான நாடியா முராத்தும் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இருவரில் நாடியா முராத் (25) இராக்கைச் சேர்ந்த இளம் குர்து மனித உரிமை ஆர்வலர்.
ஈராக்கில் சிரியா எல்லையில் உள்ள சிஞ்சார் கிராமத்தில் அமைதியாக தான் முராத்தின் வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது.
2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முராத் வசித்த கிராமத்துக்குள் நுழைந்த ஐஎஸ் தீவிரவாதிகள் குர்திஷ் இன மக்களை குறி வைத்து தாக்கினர்.
யாசிதி ஆண்கள் அனைவரையும் கொன்று குவித்த ஐஎஸ் தீவிரவாதிகள், யாசிதி பெண்களை பாலியல் அடிமைகளாக இழுத்துச் சென்றனர். அப்போது முராத்தும் அவர்கள் கைகளில் சிக்கியதால் அவரது வாழ்க்கையும் தலைகீழானது.
தொடர்புடைய பதிவு
ஐஎஸ் தீவிரவாதிகளால் அடைத்து வைக்கப்பட்டிருந்த முராத் 2016-ம் ஆண்டு மொசூலில் இருந்து தப்பிச் சென்றார். அங்கிருந்து பல கிலோ மீட்டர் தொலைவு நடந்து யாசிதி மக்களுக்காக ஐநா அமைதிருந்த முகாமுக்கு வந்து சேர்ந்தார்.
அவரது 6 சகோதரர்களும், தாயும் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். உறவுகளை இழந்த பின்னரும் தன்னம்பிக்கையை கைவிடாமல், அங்கிருந்தபடியே யாசிதி பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து விடுவிக்கும் பணிகளை ஒருங்கிணைத்தார்.
அவரது முயற்சியால் நூற்றுக்காண பெண்கள் விடுவிக்கப்பட்டனர்.அதன் பின்னர் அவர்களுக்கான மறுவாழ்வு பணிகளையம் அவர் மேற்கொண்டு வருகிறார்.
ஐநா சபை கூட்டத்தில் கலந்து கொண்டு முராத் தனக்கு நேர்ந்த கொடூரத்தை முதன் முதலாக சொன்னபோது உலகமே அதிர்ந்தது.
ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து பெண்களை மீட்கும் அவரது பணியை பாராட்டி ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை விருது வழங்கி அவரை கவுரவித்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலை தடுக்கும் ஐநா அமைப்பின் தூதராகவும் முராத் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது நோபல் அமைப்பு அமைதிக்கான பரிசு வழங்கி முராத்தை பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
