தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து வளாகத்தினுள்ளே மாணவர்கள் போராட்டம்!

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட அம்பேத்கர் – பெரியார் வாசிப்பு வட்டம் என்கிற அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ஐஐடி வளாகத்தினுள்ளே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

iit-campusஐஐடியில் செயல்பட்டு வந்த அம்பேத்கர் – பெரியார் வாசிப்பு வட்ட மாணவர் அமைப்பு, விதிகளை மீறியதாகக் கூறி ஐஐடி நிர்வாகம் அந்த அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பேத்கர் – பெரியார் வாசிப்பு வட்ட மாணவர்கள் ஐஐடி வளாகத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தடையை நீக்க வேண்டும் அனைத்து அமைப்புகளையும் சமமாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தி இருந்தனர். தங்களது கோரிக்கைகளை அவர்கள் முழக்கங்களாகவும் எழுப்பினர்.

இதனிடையே மாணவர்களின் போராட்டத்தையொட்டி செய்தியாளர்கள் ஐஐடி வளாகத்தினுள் செல்ல முயன்றனர். காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் செய்தியாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

Comments
Loading...