Designed by Iniyas LTD
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்…
நேற்றையதினம் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் துமிந்த திஸாநாயக்க உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களே கலந்து கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் பேசப்படுகின்றது.
ஜனாதிபதியை பலர் கைவிட்டு சென்ற நிலையிலும் , அவருக்கு பக்கபலமாக அவருடன் இருந்தவர்கள் தொடர்பில் , எவ்வித கரிசனையும் கொள்ளாது,
மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை தொடர்பாக அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை ஜனாதிபதியுடன் இருந்த தம்மை கூட்டு எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தன் பின்னணியிலும் ஜனாதிபதியே இருந்திருக்கக் கூடும் எனவும்,
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.