Designed by Iniyas LTD
ஐங்கரநேசன் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டது எங்கள் மண்ணுக்கே பெரும் பாதிப்பு! எழுத்தாளர் தீபச்செல்வன்

ஐங்கரநேசன் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டது எங்கள் மண்ணுக்கே பெரும் பாதிப்பு என்று எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஓராண்டுக்கு முன்னர் முதன் முதலாக முல்லைத்தீவில் அம்மாச்சி உணவகம் திறக்கப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்து முகப்புத்தகத்தில் எழுதிய குறிப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சராக இருந்த ஐங்கரநேசன், முன்னெடுத்த சிறந்த திட்டங்களில் ஒன்றே வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் என்றும் தனது பதிவில் எழுதியுள்ளார்.
அத்துடன் கார்த்திகைப் பூக்களைச் சூடியபடி கார்த்திகை மாத மரநடுகைத் திட்டத்தையும் ஐங்கரநேசன் முன்னெடுத்தமையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீரியதொரு சூழலியளானும் தமிழ் தேசியவாதியுமான ஐங்கரசேன் வடக்கு கிழக்கின் மண்ணுக்கு மிகவும் உகந்த ஒரு விவசாய அமைச்சர் என்றும் அவர் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட செயல் களை விளைந்த எங்கள் மண்ணுக்கே பெரும் பாதிப்பு என்றும் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.