தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐந்தாவது நாளாக தொடரும் அதிமுக நேர்காணல்

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல், சென்னை போயஸ் தோட்டத்தில் ஐந்தாவது நாளாக நடைபெற்றது.  admk

தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் கடந்த 6ம் தேதி தொடங்கியது.    இந்நிலையில் ஐந்தாவது நாளாக நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய நேர்காணலில் வேலூர், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.  இதை அடுத்து பிற்பகல் 3 மணியளவில் தொடங்கி மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட நேர்காணல் நிறைவடைந்தது.  இதில் கலந்து கொள்வதற்காக விருப்பமனு செய்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments
Loading...