தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐந்து வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

downloadகிளிநொச்சி – வட்டக்கச்சி – புதுக்காடு பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையில் தேடும் பணிகளில் பெற்றோர்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று ஞாயிறுக்கிழமை காலை சிறுவனின் சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரியின் முன்னிலையில் மீட்க்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் மரணம் தொடர்பாக கிளிநொச்சி ஸ்ரீ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...