தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சுந்தரம் அருமைநாயகம் சந்திப்பு

கிளிநொச்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் முகமாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும்  நடவடிக்கை ஆகியன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  jaffna

இலங்கை விஜயத்தில் ஈடுபட்டுள்ள மூன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சியில் மக்களை மீளக்குடியேற்றுதல் மற்றும் மீளக்குடியேறிய மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Loading...