Designed by Iniyas LTD
ஐரோப்பிய சாம்பியன்ஷி்ப் கால்பந்து: கோப்பையை வெல்லும் ஆசையில் ஸ்பெயின்
உலகக்கோப்பைக்கு இணையாக கருதப்படுவது ஐரோப்பிய சாம்பியன்ஷி்ப் கால்பந்து தொடர். இந்த தொடர் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடைபெறும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடரில் கடந்த இரண்டு முறை ஸ்பெயின் சாம்பயின் பட்டம் வென்றுள்ளது. 
தற்போது மூன்றாவது முறையாக இந்த கோப்பையை வெல்லும் ஆசையில் ஸ்பெயின் உள்ளது. ஆனால், பிரேசிலில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறிய ஸ்பெயின் அணிக்கு இந்த முறை ‘யூரோ கோப்பை’ கடும் சவாலாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. இருந்தாலும் இந்த கோப்பையை நாங்கள் வெல்லும் பசியில் உள்ளோம் என அந்த அணியின் நடுகள வீரர் பேஃப்ரிகேஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பேஃப்ரிகேஸ் கூறுகையில் ‘‘எங்களது அணி முகாமில் நல்ல உணர்வு உள்ளது. ஒவ்வொருவரும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கடும் பசியில் உள்ளதை நான் பார்க்கிறேன்.
எதாவது பெரியதாக செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எங்கள் ஒவ்வொருக்குமிடையில், நாம் இந்த தொடரில் அதிக்கம் செலுத்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பது தேவை. யூரோ கோப்பை நமக்கு சாதகமாக இருக்குமேயானால் அந்த விஷயமே அல்ல. நாம் ஒவ்வொரு போட்டியையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு எதிர் அணியும் ஸ்பெயினை வீழ்த்தி வேண்டும் என்று நினைப்பார்கள். நாம் நம்முடைய சிறந்த விளையாட்டை கொடுக்க வேண்டும்’’ என்றார்.
யூரோ 2016 கோப்பையில் ஸ்பெயின் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. ஜூன் 13-ந்தேதி தனது முதல் போட்டியில் செக் குடியரசை எதிர்கொள்கிறது. இதே அணியில் துருக்கி, குரோஷியா அணிகளும் இடம்பிடித்துள்ளன. 2006-ம் ஆண்டில் இருந்து ஸ்பெயின் அணிக்காக விளையாடி வரும் பேஃப்ரிகேஸ் 105 கோல்கள் அடித்துள்ளார்.