தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ.எஸ் அமைப்பின் துணை தலைவர் பலியாகியுள்ளதாக தகவல்கள்

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பின் துணை தலைவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்டு (Helmand) மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் துணை தலைவர் முல்லா அப்துல் ராப் (Mullah Abdul Rauf) பதுங்கியிருந்தார்.is_commander

ஐ.எஸ் அமைப்புக்கு துணை தலைவராய் இருக்கும் இவருக்கு கோராசன் (Khorasan) என மற்றொரு பெயரும் உண்டு.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்காக ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்த இவர், அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய வான்வழி தாக்குதலில், இவரும் இவரது மைத்துனரும் இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், பயங்கர ஆயுதங்களுடன் இவர் உட்பட 6 பேர் கார் ஒன்றில் சென்றபோது, ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அனைவரும் பலியாகியுள்ளனர் என கூறியுள்ளனர்.

எனினும் இவரது மரணத்தை நோட்டோ படைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...