Designed by Iniyas LTD
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரளா வெற்றி
3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கொச்சியில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவை தோற்கடித்தது.
கேரளா அணியில் 48-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் பெல்போர்ட்டும், 90-வது நிமிடத்தில் வினீத்தும் கோல் அடித்தனர். கோவா அணியில் ரபெல் கோயல்கோ லூசிஸ் 9-வது நிமிடத்தில் கோல் போட்டார்.
9-வது ஆட்டத்தில் ஆடிய கேரளாவுக்கு இது 3-வது வெற்றி (3 டிரா, 3 தோல்வியும் உண்டு) வெற்றியாகும். கோவா அணிக்கு 6-வது தோல்வியாகும். டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-சென்னையின் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.