தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஜோர்தான் அரசு பதிலடி கொடுத்துள்ளது

தங்கள் பிடியிலுள்ள ஜோர்டான் விமானியை விடுவித்தால், பெண் தீவிரவாதி சஜிதாவை ஒப்படைப்பதாக ஜோர்டான் அரசு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

jordon_isஜப்பானை சேர்ந்த ஹருணா யுகாவா, கெஞ்சி கோடோ ஆகியோரை சிரியாவில் பிணைக்கைதிகளாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்தனர்.

இவர்களது 200 மில்லியன் டொலர்கள் கோரிக்கையை ஜப்பான் நிறைவேற்றததால், சமீபத்தில் ஹருணா யுகாவை தலைத் துண்டித்து தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் ஐப்பானின் மற்றொரு பிணைக்கைதி கெஞ்சி கோடோ (Kenji Goto)மற்றும் ஜோர்டான் விமானி கசாபே (Kasaseabeh)ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்றால், ஜோர்டான் சிறையில் மரண தண்டனை கைதியாக இருக்கும் ஐ.எஸ். பெண் தீவிரவாதி சஜிதா அல்– ரிஷாவியை (Sajida al-Rishawi)விடுதலை செய்ய வேண்டும் என தீவிரவாதிகள் திட்டவட்டமாய் கூறியுள்ளனர்.

மேலும் சதிஜாவை 24 மணி நேரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதை தொடர்ந்து பெண் தீவிரவாதி சஜிதாவை விடுவிக்கும்படி ஜோர்டானிடம் ஜப்பானின் அரசு கோரிக்கை விடுத்ததால், அவரை விடுதலை செய்ய ஜோர்டான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜோர்டான் அரசு செய்தி தொடர்பாளர் கூறியதாவது, விமானிக்காக சாஜிதாவை விடுவிக்க நாங்கள் தாயாராக இருக்கிறோம் என்றும் ஆனால் விமானியை உயிருடன் ஒப்படைக்கும் வரையில் சாஜிதாவை நாங்கள் ஒப்படைக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் விமானி உயிருடன் இருப்பதற்கு ஆதாரம் வேண்டும் என அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது

Comments
Loading...