Designed by Iniyas LTD
ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம் – துருக்கி பிரதமர்
சிரியா நாட்டின் எல்லையோரம் உள்ள துருக்கிக்கு சொந்தமான பகுதிகளில் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம் என துருக்கி பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிரியா நாட்டின் எல்லையோரம் உள்ள துருக்கிக்கு சொந்தமான பகுதிகளில் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம் என துருக்கி பிரதமர் தெரிவித்துள்ளார். சிரியா நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கிருந்தவாறு துருக்கி நாட்டின் எல்லை நகரமான கில்லிஸ் நகரின்மீது சமீபகாலமாக ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில், நேற்று கில்லிஸ் நகரின்மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். நான்குபேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள துருக்கி அதிபர் அஹமட் டவுட்டோக்லு, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்து அவர்களின் அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார்.