Designed by Iniyas LTD
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் தான் கிளாரி – டொனால்ட் டிரம்ப்
ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் தான் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் என டொனால்ட் டிரம்ப் அதிரடியாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 8-ம் திகதி நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் நாடு முழுவதும் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் நேற்று புளோரிடாவில் உள்ள Daytona கடற்கரையில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது, ‘ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை எதிரணியில் உள்ள ஹிலாரி கிளிண்டன் தான் உருவாக்கினார்’ என அதிரடியாக பேசியுள்ளார்.