Designed by Iniyas LTD
ஐ.நாவின் கதவுகளை திறப்பதற்காக 28வது நாளாக ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்
ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணமானது 25.02.2014 அன்று 28வது நாளாக 20km தூரத்தை கடந்துள்ளார்கள்.
தமிழ் உணர்வாளர்களும் மக்களும் மனிதநேயப் பணியாளர்களுக்கு தொடர்ச்சியாக தமது ஆதரவை வழங்கிய வண்ணம் உள்ளார்கள். இன்றைய நடைப்பயணத்தில் மக்களும் பங்கெடுத்தார்கள். சுவிசலாந்து நாட்டை சென்றடைய 40 km தூரம் உள்ளது என மனிதநேயப் பணியாளர்கள் அறியத்தந்துள்ளார்கள்.
Strasbourg நகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன் தமிழ் மக்களால் கண்டன ஒன்றுகூடல் இடம்பெற்றது. மனிதயேயப் பணியாளர்கள் இன்றைய கண்டன ஒன்றுகூடலிலும் கலந்துக் கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இன்று நகரபிதாவுடனான சந்திப்பிலும் முக்கிய தலைவருடனான சந்திப்பிலும் மனிதநேயப் பணியாளர்கள் ஈடுப்பட்டார்கள். மேலும் தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தற்கதாகும்.
மேலதிக தகவல் அறியத்தரப்படும்.

