Designed by Iniyas LTD
ஐ.நா உலக உணவுத் திட்டத்திலிருந்து 20 மில்லியன் டொலர் உதவி!
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் இலங்கைக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க தீர்மானித்துள்ளது. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கான உதவியாக இத்தொகையை வழங்க தீர்மானித்திருப்பதாக உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான கிளை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய பதிவு
உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான உயரதிகாரிகள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவரது அமைச்சில் வைத்து நேற்று புதன்கிழமை சந்தித்துள்ளனர். இதன்போதே இந்த விடயத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இயற்கையாக ஏற்படுகின்ற பாதிப்புக்களின் போது உணவு பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.