தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ.நா.தீர்­மா­னத்­திற்கு எதி­ராக வழக்கு! மகிந்த அணி

Dinesh_Udaya_wimal_Wasuஇலங்கை தொடர்­பி­லான ஐ.நா.தீர்­மா­னத்­திற்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யவும் நாட­ளா­விய ரீதியில் போராட்­டங்­களை முன்­னெ­டுக்க உள்­ள­தா­கவும் கூட்டு எதி­ரணி அறி­வித்­துள்­ளது.

இந்த தீர்­மா­னத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றவோ அல்­லது நாட்டில் அமுல்­ப­டுத்­தவோ அர­சாங்கம் முயற்­சித்தால் பாரிய விளை­வுகள் ஏற்­படும். ஆளில்லா விமா­னத்தை அனுப்பி மனிதபடு­கொ­லை­களை செய்யும் அமெ­ரிக்­கா­விற்கு எதி­ராக மனித உரி­மைகள் மீறல் விசா­ர­ணை­களை நடத்தி விட்டு ஐ. நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் இலங்கை தொடர்பில் பேச வேணடும் என்றும் கூட்டு எதி­ரணி குறிப்­பிட்­டுள்­ளது .

இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள என்.எம். பெரேரா நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற கூட்டு எதி­ர­ணியின் ஊடக சந்­திப்­பி­லேயே இந்த விடயம் தெரி­விக்­கப்­பட்­டது.

முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறு­கையில் ,

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்­கையின் உள்­ளக விவ­கா­ரங்­களில் அத்­து­மீறி செயற்­பட்­டுள்­ள­துடன் இரா­ணு­வத்­திற்கு எதி­ராக சர்­வ­தேச குற்­ற­வியல் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பது தொடர்­பிலும் கருத்து தெரி­வித்­துள்ளார்.

எமது இரா­ணு­வத்­திற்கு எதி­ரான குற­றச்­சாட்­டுகள் தொடர்­பி­லான சாட்­சி­களை வெளிப்­ப­டுத்த மறுக்கும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை வெறு­மனே அநீ­தி­யான குற்­றச்­சாட்­டுக்­களின் அடிப்­ப­டையில் இலங்­கைக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­றமை ஏற்றுக் கொள்ள முடி­யாது.

அதே போன்று எமது நாட்டின் இரா­ணு­வத்தின் நிர்­வா­கத்தில் தலை­யீ­டு­களை செய்­வ­தற்கு மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசை­னுக்கு எவ்­வி­தத்­திலும் அதி­காரம் இல்லை.

இலங்கை என்­பது ஒரு ஜன­நா­யக நாடு . அதன் இறை­யாண்­மைக்கும் ஐக்­கி­யத்­திற்கும் களங்கம் ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­ப­டு­வது என்­பது அனு­ம­திக்க கூடிய ஒன்­றல்ல. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சி காலத்தில் இவ்­வா­றான நிலை இலங்­கைக்கு ஏற்­பட வில்லை.

வடக்கு மக்கள் எமக்கு ஒரு­போதும் வாக்­க­ளிக்க மாட்­டார்கள் என்று அறிந்தும் அங்கு பாரிய அபி­வி­ருத்தி பணி­களை முன்­னெ­டுத்தோம். ஒரு போதும் அர­சியல் உள்­நோக்­கத்­துடன் செயற்­பட்­டி­ருக்க வில்லை. மனித இனப்­ப­டு­கொ­லை­களை முன்­னெ­டுக்க கூடிய ஆபத்­தான ஆயு­தங்கள் ஈராக்கில் இருப்­ப­தாக கூறி அப்­போ­தைய ஈராக் அதிபர் சதாம் ஹுசை­னுக்கு எதி­ரான நட­வ­டிக்­கையில் பிரித்­தா­னியா கடு­மை­யாக செயற்­பட்­டது.

ஆனால் சதாம் ஹுசைன் தண்­டிக்­கப்­பட்­டதன் பின்னர் அவ்­வாறு ஆபத்­தான ஆயு­தங்கள் எதுவும் ஈராக்கில் இல்லை என உறு­திப்­பட்­டதன் பின்னர் பிரித்­தா­னி­யாவில் பெரும் நெருக்­க­டி­யான சூழல் உரு­வா­கி­யது. இதனை மையப்­ப­டுத்தி முன்­னெ­டுக்­கப்­பட்ட ஷில்கொட் விசா­ரணை குழுவின் அறிக்கை இன்று வரையில் வெளி­யி­டப்­பட வில்லை.

அதே போன்று ஆளில்லா விமா­னங்­களை அனுப்பி அமெ­ரிக்கா மேற்­கொள்ளும் மனித படு­கொ­லை­க­ளுக்கு அளவே இல்லை. வெறு­மனே கவ­லையை மாத்­திரம் தெரி­வித்து விட்டு அமெ­ரிக்க மீண்டும் அதே நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கின்­றது. ஆனால் இலங்கை உள் நாட்டு போரின் பின்னர் பொறுப்புக் கூறும் விட­யத்தில் முழு ஈடுப்­பாட்­டுடன் செயற்­பட்­டது. அதன் சிறந்த வெளிப்­பாடே கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­களும் அதன் அறிக்­கை­யு­மாகும்.

எனவே இலங்கை தொடர்பில் தீர்­மா­னங்கள் நிறைவேற்றப்பட்டு சர்வதேச விசாரணை முன்னெடுப்பதற்கான தேவைகள் எதுவும் தற்போதில்லை. எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம். அதே போன்று பொது மக்களை தெளிவுப்படுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவும் உள்ளோம் என்றார்.

Comments
Loading...